Friday, July 17

இறைவா...ஒரு விண்ணப்பம்

 (மகனே, என் வாழ்வையும் உணர்வையும் உன்னோடு உனக்காக பகிர்ந்துள்ளேன்)







இறைவா ஒரு விண்ணப்பம்,

என்னுள் விளையும் இவன்

வெண்மையான இதயம்,

கருணை விழிகள்,

கொடுக்கும் கரங்கள்,

முட்பாதை மீதும் நடக்கும் துணிவு,

என்றென்றும் தன்னம்பிக்கை,

எந்நாளும் நற்சிந்தை,

சோர்ந்து போகா மனம்,

குன்றாத நேசம்,

குறைவில்லா புன்னகை,

திகட்டாத பண்பு,

தாய்ப்பால் சுவைத்த அவன் நா,

தமிழையும் உயிராய் மதிக்கட்டும்!

இறைவா,

இதில் குறையேதும் விழைத்து விடாதே,

என் தங்கம் பார் வணங்கும் மகானாக வேண்டாம்,

பிறர் போற்றும் அறிஞனாக வேண்டாம்,

நல்லொழுக்கம் கொண்ட தமிழ் மகனாய் தவழட்டும்,

பெண்ணியத்தை மதிக்கும் பெருந்தன்மையை அவனுக்குத் தா!

உன் அருளே அவனுக்கு நான் பெற்றுத்தரும் பெருஞ்செல்வம்!!!

 

   Ø  கொஞ்சம் நப்பாசைக் கொண்ட தாயுள்ளம் J

4 comments:

  1. இது நப்பாசை இல்லை தாயே, ஒரு தமி்ழ்த் தாயின் உன்னத ஆசை. நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. தங்களின் உன்னத கருத்திற்கு மிக்க நன்றிங்க :)

    ReplyDelete
  3. //என் தங்கம் பார் வணங்கும் மகானாக வேண்டாம்,
    பிறர் போற்றும் அறிஞனாக வேண்டாம்,
    நல்லொழுக்கம் கொண்ட தமிழ் மகனாய் தவழட்டும்,//

    அதற்கான அருள் இறைவனிடமிருந்து உங்கள் குழந்தைக்கும் நிச்சயமாக கிடைக்கும்.அதற்கான காலநிலைகளை, சந்தர்ப்பங்களை பெற்றோர் என்கிற முறையில் நீங்களும் அமைத்துக்கொடுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி:)

    ReplyDelete