Monday, July 6

எனை யாசிப்பவன்...



சோர்ந்த போது தலை சாய்க்க

ஒரு தோள்,


துயரத்தைத் தூரவிட்டு விழி நீர்

துடைக்கும் விரல்கள்,


வெற்றியின் போது கட்டியணைக்கும்

அன்பு கரங்கள்.



அன்னையாக, தந்தையாக, அண்ணனாக, தோழனாக, குருவாக

என் குழந்தையாக - என்றும் என்னவன்,

என்னை நொடிக்கொரு முறை ஏங்க வைப்பவன்

என்னருகே இனியவன் - என் பிரியமானவன்,

நால்வகை குணங்களை ஒருங்கே அரங்கேற்றி

உடல், பொருள், ஆவியை உறைவித்தவன் – என் வித்தகன்,

பெண்மையின் நாணங்களைத் தொலைத்து

அவனிடத்தில் தாய்மையை உணர செய்தவன் – என் கலைதேவன்,

என் நிழலையும் தொடரும் நிஜமானவன்

ஏழேழு பிறவியும் என் துணையானவன் - எனக்கே எனக்கென்று ஒருவன்!!!

 

மங்கையின் மலர்மனம் மன்னவனிடத்தே மயங்கிக்கிடக்கும்,

பாவையிவள் பார்வை பாதச்சுவடினைப் பார்த்திருக்கும்,

காத்திருப்பேன் காலடிச்சேரும் காலத்தினைக் கண்ணிமைக்குள் கணக்கிட்டு!!!


No comments:

Post a Comment