Friday, July 17

இறைவா...ஒரு விண்ணப்பம்

 (மகனே, என் வாழ்வையும் உணர்வையும் உன்னோடு உனக்காக பகிர்ந்துள்ளேன்)இறைவா ஒரு விண்ணப்பம்,

என்னுள் விளையும் இவன்

வெண்மையான இதயம்,

கருணை விழிகள்,

கொடுக்கும் கரங்கள்,

முட்பாதை மீதும் நடக்கும் துணிவு,

என்றென்றும் தன்னம்பிக்கை,

எந்நாளும் நற்சிந்தை,

சோர்ந்து போகா மனம்,

குன்றாத நேசம்,

குறைவில்லா புன்னகை,

திகட்டாத பண்பு,

தாய்ப்பால் சுவைத்த அவன் நா,

தமிழையும் உயிராய் மதிக்கட்டும்!

இறைவா,

இதில் குறையேதும் விழைத்து விடாதே,

என் தங்கம் பார் வணங்கும் மகானாக வேண்டாம்,

பிறர் போற்றும் அறிஞனாக வேண்டாம்,

நல்லொழுக்கம் கொண்ட தமிழ் மகனாய் தவழட்டும்,

பெண்ணியத்தை மதிக்கும் பெருந்தன்மையை அவனுக்குத் தா!

உன் அருளே அவனுக்கு நான் பெற்றுத்தரும் பெருஞ்செல்வம்!!!

 

   Ø  கொஞ்சம் நப்பாசைக் கொண்ட தாயுள்ளம் J

விட்டுவிடேன்...


எத்துணை ஏக்கம்
என் மீது உனக்கு...
நாள்தோறும் பார்த்தாலும்
இப்படி என்னை அள்ளுகிறாயே!
காற்றுக்குக்கூட இடம் தர மறுத்து என்னை மூச்சடைக்க உராய்ந்து செல்கிறாயே! நீ தொட்டவுடன் சில்லிட்டு போகிறேன்
உன் குறும்பில் என்னையே துறக்கிறேன்..
உன் கொஞ்சல் சுகமானது என்றாலும்
நேரம் தடுக்கிறது...
விட்டு...விடு...நான் போகணும்...
உன்னால் கண்டப்படி முழுதும் நனைந்தேன்
விட்டு விடேன்...ஐயோ பிலீஸ்...
உன்னை விட்டு போகவும் மனமில்லை
இப்ப போய்...அப்புரமா வரேன்.. சரியா?
போதும் நிறுத்து...ரொம்ப குறும்பு - உனக்கு…
இரு...இரு...குழாயை அடைத்து விட்டால்
என்ன செய்ய முடியும்?! - உன்னால்
செல்லமே, உன்னில் நனைய;
உன்னை இரசிக்க எனக்கும் ஆசைதான்..
தயாராய் இரு...அப்புரமாய் வரேன்..
கொஞ்சம் காத்திரு என் குளியலரை நீரே!!!

Wednesday, July 15

தமிழ் குழந்தை...ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. 
பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். 
பன்னிரெண்டு மாதமும் அழகானவை. 
அதிலும் அழகு அவற்றை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். 
தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்கிறது....சித்திரையில் சோலை தழைக்கும்.

வைகாசியில் காற்று வாய் திறக்கும்.

ஆனிக்காற்று அலறி வீசும்.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.

ஆவணியில் மேகம் தாவணி போடும்.

புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.

கார்த்திகையில் கன மழை பொழியும்.

மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.

மாசியில் மாம்பூ பூக்கும்.

பங்குனி வெயில் படையைக் கலக்கும்.

Monday, July 6

என்ன இது...

மிக உன்னதமான, மகத்தானது தான்

உயிர் தரும் கடமையாயிற்றே….

மண்ணில் ஒரு விதை முளையெடுக்க

எத்தனை எத்தனை காவல்கள்

இது உள்ளுக்குள் விதைந்து வளரும் புது ஜீவன்

உணர்ச்சி பல யூகிக்கும் பிண்டம்…

தந்தை உயிர் தர, தாய் தன்னில் மீதியைத் தந்தாள்…

தேகம் ஒன்றில்… ஜீவன் ரெண்டு… மூச்சு ஒன்று…

 

பிரபஞ்சத்தை கிழித்தெரிக்கும் 

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் இணைப்பு,

பாரில் விழித்தெழும் புது இணைப்பு,

இறைவன் பெண்மைக்கு மட்டுமே

அளித்த தித்திக்கும் பிரசாதம்…

தாய்மை சுகமான சுமை

தாய்மனதை அந்த பிஞ்சும் உணர்கிறது…

செல்வம் கோடி சேர்த்திருப்பினும்

இந்த பந்தத்திற்கு – தாய்மைக்கு – ஈடேது?!

 

பத்து திங்களும் புத்தம் புது ஜென்மம்

புது பிறவி எடுக்கிறாள்…

மசக்கையுற்ற மேனிதனை

காத்து சேவகம் செய்து

பட்டும் படாமல் உண்டுறங்கி

கால்களின் விரல்களைக் கூட மறக்கிறாள்

தாய்மை திரையிட்டு இருப்பதால்…

சின்ன சின்னதாய்

உயிர் கசியும் வலிகள்

நொடிக்கொரு முறை

செல்ல உதைகள்

ஒரு சுவாசம் போதாமல்

நொடிக்கு இரண்டானது

விரல்களின் செல்ல வருடலில்

சின்னவனின் குட்டி உறக்கம்…

இவள் இதய வானில் நொடிப்பொழுதில்

கோடி வர்ணங்களில் அழகிய ஜாலங்கள்!

விழி நுனியிலும் நெஞ்சுக்கூண்டிலும்

இன்னும் ஈரமாயிருக்கும் மோகன தருணங்கள்!

சிங்கார கண்ணனவன் சீதனமாய் தந்த

அன்பு மிளிரும் உறவிது,

தாய்மையின் மேன்மைதனை

மின்னச் செய்யும் ஆழமான உணர்விது!

 

பாவையவள் மென்மையானவள்,

பூப்பெய்யும் போது

பெண்மையின் இரகசியத்தை அறிகிறாள்!

ஆண்மை ஆட்கொள்ளும் போது

பெண்மையின் குணங்களை உணர்கிறாள்!

தாய்மையைச் சுவாசிக்கும் போது

மங்கையர் பிறப்பின் மகத்துவத்தையும்

வாழ்வின் முழு அர்த்தத்தையும் நுகர்கிறாள்!

 

தாய்மை,

பலருக்கு வாய்ப்பதில்லை,

சிலருக்கு நிலைப்பதில்லை,

பெற்றவர்கள் பாக்கியவதிகள்,

உணர்கின்றவர்கள் உன்னதமானவர்கள்,

பெற்றுணர்ந்து மெய் சிலிர்க்க காத்திருப்போர்

தாய்மையின் சின்னங்கள்!

 

ஆண்களே,

உங்களிடத்திலும் தாய்மையுண்டு,

பெண்ணை நேசித்து மனதில் சுமக்கிறீர்,

காதலை சுவாசிக்கிறீர்,

திருமணம் உங்களுக்குப் பிரசவம் தினம்!

காதல் குழந்தையுடன் இனிதே வாழுங்கள்__ மலர்விழி Jஎனை யாசிப்பவன்...சோர்ந்த போது தலை சாய்க்க

ஒரு தோள்,


துயரத்தைத் தூரவிட்டு விழி நீர்

துடைக்கும் விரல்கள்,


வெற்றியின் போது கட்டியணைக்கும்

அன்பு கரங்கள்.அன்னையாக, தந்தையாக, அண்ணனாக, தோழனாக, குருவாக

என் குழந்தையாக - என்றும் என்னவன்,

என்னை நொடிக்கொரு முறை ஏங்க வைப்பவன்

என்னருகே இனியவன் - என் பிரியமானவன்,

நால்வகை குணங்களை ஒருங்கே அரங்கேற்றி

உடல், பொருள், ஆவியை உறைவித்தவன் – என் வித்தகன்,

பெண்மையின் நாணங்களைத் தொலைத்து

அவனிடத்தில் தாய்மையை உணர செய்தவன் – என் கலைதேவன்,

என் நிழலையும் தொடரும் நிஜமானவன்

ஏழேழு பிறவியும் என் துணையானவன் - எனக்கே எனக்கென்று ஒருவன்!!!

 

மங்கையின் மலர்மனம் மன்னவனிடத்தே மயங்கிக்கிடக்கும்,

பாவையிவள் பார்வை பாதச்சுவடினைப் பார்த்திருக்கும்,

காத்திருப்பேன் காலடிச்சேரும் காலத்தினைக் கண்ணிமைக்குள் கணக்கிட்டு!!!


Friday, July 3

புது உறவு...

தள்ளாடி தத்தி நடக்கும் போது

உனை நான் கரங்களால் தாங்க,

எனை மெருதுவாய் மெல்ல

சுமந்தவரடா உன் தந்தை,

ஆணா பெண்ணா என்ற வினாக்களுகிடையே

எங்களின் ஊடல் உனை வருத்துமென்று

அமைதி காத்து, விழிகளின் வில் சண்டை செய்தோம்...

எனக்குள் நீ நடத்தும் அதிரடி யுத்தங்கள்

என் செல்களில் இனம் புரியா தாக்குதல்கள்

நீ எனக்களித்த இன்ப வலிகளவை!

 

என் உயிருக்குள் ஓருயிர்,

உன் அப்பாவைத் தவிர்த்து

நான் சுமக்கும் மற்றொரு ஜீவன்

என்னில் ஒரு பாதி – நீ,

இருவராக மட்டுமே வாழ்ந்த எங்களுக்கு

புதிய வாழ்வைக் காட்ட வந்த தேன் சிட்டு

இறைவன் எங்களுக்களித்த உயிருள்ள சீதனம்

புன்னகைக்கும் விண்மீன் – நீ,

எங்கள் வாழ்வின் முழுமை - உன் வருகை!


Thursday, July 2

மகளே!

>முத்து  முத்து மகளே, 
>
முகம் காணாத மகளே 
>
மாதங்கள் பத்து மனதினில் 
>
சுமந்து 
>
கற்பனையில் பெற்ற கண்மணியே 
>
நான் உனக்கு கவிதையில் 
>
எழுதும் கடிதம் 

>எழுதுகிறேன் ஒரு கடிதம் 

>வானத்து மலரே வையத்து 
>
நிலவே 
>
வாழ்க்கையில் பொருளே வா 

>மலடியின் மகளே மகள் எனும் 
>
கனவே 
>
மடியினிலே நீ வா 

>பாறையில் மலர்ந்த தாமரையே 
>
இரவினில் எழுந்த சூரியனே 
>
எழாமலே எழும் நிலா நீயே 

>முன்னூற் நாள் 
>
கர்ப்பத்திலே 
>
வாராத பெண் நீயடீ 
>
எந்நாளுமே நான் பொம்மைதான் 
>
என்றாலும் தாய்தானடி 

>உலாவும் வானம்பாடியாய் 
>
பண்பாடி வாழ்க கண்ணே 
>
புறாவைப் போல சாந்தமாய் 
>
பண்பாடு போற்று பெண்ணே 
>
நாளொரு மேன்மை நீ பெறுவாய் 
>
நான் பெற்ற இன்பம் யார் 
>
பெறுவார் 
>
பெறாமலே பெறும் சுகம் நீயே! 

>சிந்தாமணி என் கண்மணி 
>
சிற்றாடை நீ கட்டடி 
>
என் மாளிகை முற்றத்திலே 
>
பொன்னூஞ்சல் நீயாடடி 
>
உலாவும் அன்புக் கோகிலம் 
>
எங்கேயும் கானம் பாடு 
>
கனாவில் கூட சோம்பலே 
>
இல்லாமல் ஞானம் தேடு 
>
நல்லவளாக நடை போட்ய் 
>
வல்லவளாகிட தடை ஏது 
>
விழாமலே விழும் மழையே 

>பொல்லாதது உன் பூமிதான் 
>
போராட்டம்தான் வாழ்வடி 
>
கொல்லாமலே கொவாரடி 
>
வராத துன்பம் வாழ்விலே 
>
வந்தாலும் நேரில் மோது 
>
பெறாத வெற்றி இல்லையே 
>
என்றே நீ வேதம் ஓது 
>
ஊமைக்கும் நாக்குகள் 
>
வேண்டுமடி 
>
உரிமைக்கு போரிட தேவையடி 
>
தொடாமலே சுடும் கனல் நீயே!