Saturday, May 21

வந்து விடு........


எங்கு இருக்கீங்க…எப்ப வருவீங்க…

உங்கள பார்க்கணும்…பேசணும்….

தோள்களில் சாயணும்…மார்பில் முகம் புதைக்கணும்…

உன் அணைப்பில் நானிருக்க

என் கண்களில் நீ வாழணும்…

சத்தியா சொல்றேன்….

உன் மனதை காயப்படுத்தமாட்டேன்….

கலங்க வைக்கமாட்டேன்…

என் பகலும், என் இரவும் நீதான்….

என் விடியலாக உன் விழி,

என் நிஜமாக உன் மீசை…

எப்போதும் நீ என் பக்கத்தில்…

உன் வாழ்க்கை பயணத்தில் துணையாக நான்…

உன் வெற்றியின் பின்னால் நான் சின்ன நிழலாக…

எப்போது வருயாய்….

உன் பெயர் தெரியாது….

ஊர், வயது, உருவம்…எதுவும் தெரியாது….

எதுவும் தெரியாது….ஆனாலும் நேசிக்கிறேன்….

ஏன் என்று தெரியாது….

என் வாழ்வே நீதான்…

ஜென்மம் பல காத்துகிடப்பேன்…- உனக்காக…

உன் சுவாசமிருக்கும் முகவரி தெரிந்தால் போதும்…

என் உயிர் மறு ஜீவன் பெறும்….

உன் வெப்பம் – என் மணிமாளிகை,

உன் சுவாசம் – என் தேடல்,

உன் விழி – என் ஒளி,

நீ – என் இன்பம்,

- என் நவம்பர் மாத மழை

- சில்லெனும் மழைச்சாரல்

- மார்கழி குளிர்

- சித்திரை வெயில்

என் உயிர் நீ,

நீயின்றி நான் ஏது,

என்னிடம் வந்து விடு,

உன் இதயத்தை இதமாய் பார்த்துக்கொள்வேன்,

உன் குழந்தைக்கு நல்ல அம்மா,

உன் அம்மாவுக்கு என்றும் சுகமான மகள்,

தந்தைக்கு பொறுப்பான மருமகள்,

உன் குலம் காக்கும் பெண்மகள்…

உனை என்றும் மறக்கமாட்டேன்…

காணும் வரை இறக்கமாட்டேன்…

உயிரே வந்துவிடு…

இளமை போனப்பின்னும் உன் கை பிடித்து நடந்து

முதுமை காதலை உன்னோடு நான் நுகர வேண்டும்…

என் காதல் உண்மையானது….அதுவும் உனக்கானது…

உனை மட்டுமே நினைத்து வாழும் ஜீவன் இது!

Thursday, May 19

கல்யாணம்

தோழி : ஏய் ! நீ எப்போதான் கல்யாணம் பண்ண போற…எப்படி பட்டவரை எதிர்பார்க்குற??

நான் : கல்யாணமா?! நடக்கும் போது நடக்கத்தும்…எப்போ என்ன அதை பத்தின பேச்சு…வேலை இருந்தா பாருமா….

தோழி : தோடா…போதும்…அடங்கு…எனக்கு தெரியாதா உன்ன பத்தி…ஆயிரம் ஆசை உன் மொழியில தெரியுது…உன் மனசு எனக்கு தெரியும்…உண்மைய சொல்லுமா என் ராசாத்தி…

நான் : ஹாஹாஹா…சரிதான்…உனக்கு ரொம்பவே திறமை…but கொஞ்சம் அமைதியா கேளு…அவசர படாதமா…

தோழி : ம்ம்ம்….சொல்லு…ஓவர் சீன் போடாதே…ரொம்பெ படிச்ச, நல்ல வேலை செய்யும் ஒருத்தர்….அப்படிதானே…அதோட உன்ன நல்ல பார்த்துக்கணும்…பாடணும்…ம்ம்ம்…etc…ஓகேவா?!

நான் : no no no….இல்ல…நான் அங்கவீனரை துணையா ஏற்கலாம்னு நினைக்கிறேன் !

தோழி : ஏய்! என்னடி ஆச்சு…ஏன் இப்படி? U mean cacat….?

நான் : yea...தெரியல…திடீர்னு இப்படி ஒரு எண்ணம்…அதோட எனக்கு மட்டும் விருப்பம் இருந்து பயனில்ல…அவருக்கும் உடன் பாடு இருக்கனும்…தன் குறையினால் தான் தனக்கு இப்படி ஒரு பெண் துணையா இருக்கானு ஒரு நினைப்பு அவருக்கு ஒரு போதும் வர கூடாது….

தோழி : ஏய்! உனக்கு என்ன பைத்தியமா…உனக்கு என்ன குறைச்சல்…ஏன் இப்படி நினைக்கிற? நீ ரொம்ப நல்லவடி…

நான் : இதுல என்ன இருக்கு! Don’t worry dear…it’s reality…சுமார இருக்கும் பெண்களுக்கே பல குறை கண்டு பிடிக்கிறாங்க…தன் மனவியை விட அழகாய் ஒரு பெண்ணைப் பார்த்தால் கூட ஆண் மனம் அலைகலையுமாம்! அப்படி இருக்க நான் எல்லாம் எம்மாத்திரம்…சொல்…

தோழி : ….

நான் : என் சுக துக்கங்களில் பகிர்ந்து கொண்டு என் உறவுகளை ஏற்று எதிர்காலத்தை திட்டமிட்டு என்றும் உண்மையாய் என்னிடம் அன்பாக உறவாடும் ஒரு ஜீவன் போதும்…மற்றபடி பெரிய ஆசையெல்லம் இல்லை…இது கூட நப்பாசையோனு தோனுதுமா!

தோழி : இது சராசரி பெண்ணின் ஆசை தான்…ஆனா முதல்ல நீ சொன்ன விஷயம்…

நான் : ம்ம்ம்…ஒரு அங்கவீனர்…

தோழி : செவிடர் வேனா…உன் சின்ன செல்ல குரலைக் கேட்கும் பாக்கியம் அவருக்கு இல்லாமல் போகும்…அதுவே அவரை வருந்த வைக்கும்..வேணாம்மா….

நான் : ஊமையானவர்…!?

தோழி : வேணா…வேணா…உன் மொழி கேட்டு உன்னோடு வாய் சண்டை போடும் அழகை நான் பார்க்கணும்…அதோட நீயே வாயாடி, உனக்கு ஈடு தர…….

நான் : என் மனசில…ஒரு குருடர்…! என் அக அழகை மட்டும் பார்க்கும் ஒரு இதயம்…actually எப்படி இருந்தாலும் ஓகே…நிஜமா எனை விரும்பனும்…

தோழி : உன் மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்…

நான் : மு.வ. சொன்ன ஒன்னு ஞாபகம் வருது…ஒரு மாளிகை கட்டி வாழ முயற்சி செய்…முடியவில்லையெனில், சாதாரண உனக்கு ஏற்ற வீட்டில் வாழ்….இல்லையெனில், குடிசையில் வாழ்ந்து பார்…இல்லை மரத்தடியில் வாழவும் வருந்தாதே….பெண்ணின் திருமண வாழ்க்கை இதற்கு பொருந்தி வரும் அழகே அழகு….

தோழி : இன்னொன்று மறந்து போனாயா? சிலர் காதலுக்காக வாழ்கிறார்கள்; சிலர் காதலைத் தேடி பெற்று வாழ்கிறார்கள்; இன்னும் சிலரோ ஆராய்ந்து காதலைப் பெறுகிறார்கள்…நீயும் அதை விரைவில் நுகர வேண்டும்……………

Saturday, May 7

தாய்மை

உங்கள் அன்பில் நனைந்தேன், திளைத்தேன்... - இன்று

உணர்கிறேன்...- நான் இல்லையேல்,

அம்மா...

உங்களுக்கு மலடி என்ற அவலப்பட்டம்,

உங்களுக்குள் தாய்மையைத் உணரச்செய்த கரு - நான்!

உங்கள் தோளில் சாய்ந்து, மடியில் விளையாடி,

உதிரத்தில் வளர்ந்து, கனவை நினைவாக்கி,

உங்கள் அன்பு மகளாய் முன் நிற்கிறேன்,

பொறுமையும் புன்னகையும் பெண்ணில் அணிகலன்,

நீங்கள் எனக்கு தந்த பொன் நகையது...