Thursday, March 24

Monday, May 27

மனைவி...

1. சிறந்தவள் - விலைமதிப்புள்ளவள்

   பண்புள்ள மனைவியைப் பெற்றுக்கொள்கிறவன் பாக்கியவான்.


2. நம்பிக்கைக்குப் பாத்திரமானவள்

   நியாயமான காரியங்களில் அவள் உண்மையாக இருப்பாள். 


3. எப்போதும் எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருப்பாள்:

குணசாலியான மனைவி கணவனுக்குக் கீரிடமாக இருக்கிறாள்.


4. ஆர்வமுள்ள உழைப்பாளி

ஒரு பொறுப்புள்ள மனைவிக்கு எதையும் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது எதை எதை எப்போது எப்படிச் செய்யவேண்டும் என்று குறிப்பறிந்து தானே செய்து முடிப்பாள்.


5. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மனப்பாங்கு உள்ளவள்.

அவள் கருத்தாய், சிரமத்தைப் பாராமல், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவைகள் என்று அறிந்து அதைத் தேடுவாள்.


6. கடைசியில் படுத்து, முதலில் எழுந்திருப்பாள்

எவ்வளவு அலுப்பாக இருந்தாலும்,    தன் கடமைகளைக் காலையில் தொடங்கி படுக்கபோகும்வரை பம்பரமாயச் சுழன்று கவனிப்பாள்.


7. குடும்ப முன்னேற்றமே அவர் மூச்சு


குடும்ப முன்னேற்றத்தில் கணவனுக்கு உறுதுணையாக இருப்பதுடன் தன்னுடைய சுய முயற்சியினால் சில சேமிப்புகளைச் சேர்க்கிறாள்.


8. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறாள்.

மருத்துவர்களுக்குப் பெருந்தொகையை மாதாமாதம் கொடுத்துக் கொண்டிராமல் நல்ல முறையில் உடல்நலத்தைப் பேணிக் காத்துக் கொள்கிறாள்.


9. முயற்சி திருவினை ஆக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பாள்.


தன் முயற்சியின் பலன், எந்த சூழ்நிலை வந்தாலும் சமாளிக்க அதிக நேரம் உழைக்கிறாள்.


10. பல்கலை பயின்ற வல்லுநர்.


இந்த வேலைதான் தெரியும்.    இது தெரியாது என்றே கிடையாது. அனைத்து வேலைகளையும் செய்து குடும்பத்தின் எந்த தேவைகளுக்கும் மற்றவர்கள் கையை எதிர்ப்பார்க்கமாட்டாள்.


11. நல்ல சமாரியன் கொள்கையுடையவள்.


தன்னுடைய குடும்ப அலுவல்களைக் கவனிப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல், தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதிலும் இன்பம் காண்கிறாள்.


12. அவள் குரங்கு அல்ல- தூக்கணாங்குருவி.


தன்னுடைய கணவன், பிள்ளைகள் அனைவரையும் கனனித்து எப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கலங்காமல் இருப்பாள்.


13. தகுதியான உடையலங்காரம்

அலங்கோலமாகக் உடுத்திக்கொண்டு, அதற்கு நாகரீகம் என்ற போர்வை போர்த்தி, மாயம் பண்ணாமல், சமுதாயம் ஏற்றுக்கொண்டு மதிக்கக்கூடிய உடையலங்காரம் செய்து கொள்வாள்.


14.மதிப்புக்கும், கண்ணியத்துக்கும் உரியவள்.


அவளுடைய நற்பண்பு, சாமர்த்தியம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகியவைகளின் காரணமாக, சமுதாயத்தில் அவளுடைய கணவனுக்கும் மரியாதையும் செல்வாக்கும் கிடைக்கிறது.


15. சாமர்த்தியமும் வியாபார நோக்கும் உள்ளவள்.


குடும்பம் நடத்துதில் தான் கெட்டிக்காரி என்றில்லை. வெளி விவகாரங்களையும் கூடப் புரிந்துக்கொண்டு, அதற்கேற்ற முறையில் செயல்பட்டு பொருள் ஈட்டுவாள்.


16. வாழ்க்கையில் கண்ணியமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் அவள் சொத்து.


தொழில் முயற்சியில் வெற்றி, அவளுக்கு வாழ்க்கையில் தெம்பையும்,    உற்சாகத்தையும் ஊட்டி எதிர்க்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறாள்.


17. விவேகமும் அன்பும் நிறைந்தவள்:


அனுபவத்தின் மூலம் அவள் பெற்றுக்கொண்ட ஞானம்,    சகிப்புத்தன்மை,    புத்திசாலித்தனம் ஆகியவைகளைப் பிரயோகித்து பிரச்சனைகளை அணுகுவதில் வெற்றி பெறுகிறாள்.


18. புத்திக் கூர்மையும்,சுறுசுறுப்பும் உள்ளவள்.


மனைவியாகவும், தாயாகவும் அவளுடைய புத்திக்கூர்மையானது. அவளுடைய குடும்பத்துக்குப் பெரும் துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்.


19. பாராட்டுக்குரியவரும், ஒப்புவமையில்லாதவளுமாய் இருக்கிறாள்.


அனைத்துப் பண்புகளையும் உடைய தாயாகவும்,    மனைவியாகவும் விளங்கும் ஒரு பெண்மணியை பிள்ளைகள் வாழ்த்தாமலும், புருஷன் பாராட்டாமலும் இருப்பது எப்படி?


20. இறைபக்தியும் பயமும் உள்ளவள்.

இறைவனுக்குப் பயந்து நடக்கிற பெண்மணி புகழப்படுவாள் அவள் தன் கணவனோடு ஒன்று பட்டு வாழ்வதினால் இப்படிப்பட்ட அரும் குணதிசயங்களைப் பெற்றிருக்கிறாள்.

அம்மாவிற்கு...தோழமை

சந்தங்கள் முறிந்து,
சப்தம் பிறக்கிறது
தனிமை விலங்கு அவிழ்கிறது
நட்பு அருகில் படர்கிறது....

தோழமை,
அது உணர்வின் விடியல்,
புதிய உறவின் உதயம்,
மனதில் புதிய நீரூற்று....

சின்ன பிரிவு,
முகங்களைத் தேடி,
பெயர்களைச் சிந்தித்து,
மனம் போடும் பழைய கணக்கு....
கருவிழி பனிக்கிறது!

Tuesday, December 13