Monday, August 3

காதலே...காதலே...

ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு.....










பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை, முன்பு (கி.பி 377) ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்.
அவன் பெயர் மாசோலஸ் (அவர்கள் மொழியில் ஆணழகன்).
அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்.திருமணம் செய்துகொண்டு அன்பைப் பொழிந்து வாழ்ந்து வந்தனர்... துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,
இளம் வயதிலேயே இறந்து போனான்.
ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு...
ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது, வருத்தியது…
மனதிற்குள் அழுதாள், புலம்பினாள், பித்தானாள்...
அந்த நினைவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள்.

உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள்..
36 தூண்கள் அமைக்கப்பட்டன..
விண்முட்டும் அளவில் 24 அடுக்குகள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது.. நடுவில் கல்லறை..
அதற்குமேல் மாசோலஸ் மன்னருடைய பிரமாண்ட சிலை..
கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..
கண்ணைக் கவரும் ஓவியங்கள்..
இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து
அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்.















இது உலகின் பழம்பெறும் கலை அதிசயமாக போற்றப்பட்டு வருகிறது.
மேலும் இம்மன்னரின் பெயர் இது போன்ற கட்டிட கலை மற்றும் அமைப்பு கொண்ட அனைத்து கட்டிடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால்,
மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!

உணர்ந்தால்…காதல் உயிரானது!
என்றும் உயர்வானது!
அது யாரையும் விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை...
உலகில் முதலில் தோன்றியது காற்று,
அதில் இதமாய் கலந்து அனைவரையும் ஈர்த்துக்கொண்டு கம்பீரமாய் வலம் வருவது காதல்...

காதலே...காதலே...உனை நுகர்கிறேன், உன்னால் வாழ்கிறேன்!

4 comments:

  1. //மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால்,
    மாசோலஸிற்கு காதல் மனைவி கட்டிய உன்னத மாசோலியம்!//

    அன்பே எனக்கும்
    ஒரு வாய்ப்பு கொடு!!
    கால் கடுக்க காத்திருக்கிறேன்
    உனக்கென கல்லறை கட்ட...

    இப்படிக்கு
    இன்றுவரை உன்னை மட்டுமே
    காதலிப்பவன்

    ReplyDelete
  2. கால் கடுக்க காத்திருப்பதும் இன்று வரை காதலிப்பதும் கை பிடிக்க இல்லையா...கல்லறை கட்ட தானா???
    இதற்கு வாய்ப்பு வேற கேட்குறிங்க...என்னங்க அநியாயம் இது :(

    கல்லறை கட்டும் ஆசையை விட்டு விட்டு முதலில் காதலியுங்க...கல்லறை கட்டும் நேரம் ஒருநாள் கட்டாயம் வரும் (பிறப்பு இருப்பின் இறப்பும் உண்டு)
    அன்று கட்டுங்கள் உங்கள் இதய தேவிக்கு அந்த கல்லறையை...

    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி:)

    ReplyDelete
  3. புதுசா இருக்கே ?!?!?

    நன்றி

    ReplyDelete
  4. புதுசில்லேங்க...பழமையானது :)

    ReplyDelete