Wednesday, July 15

தமிழ் குழந்தை...







ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. 
பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். 
பன்னிரெண்டு மாதமும் அழகானவை. 
அதிலும் அழகு அவற்றை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். 
தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்கிறது....



சித்திரையில் சோலை தழைக்கும்.

வைகாசியில் காற்று வாய் திறக்கும்.

ஆனிக்காற்று அலறி வீசும்.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.

ஆவணியில் மேகம் தாவணி போடும்.

புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.

கார்த்திகையில் கன மழை பொழியும்.

மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.

மாசியில் மாம்பூ பூக்கும்.

பங்குனி வெயில் படையைக் கலக்கும்.

3 comments:

  1. முன்பே படித்து விட்டேன்
    தொடர்ந்து நிறைய பதிவிடுங்கள்

    ReplyDelete
  2. நன்றி அண்ணா...

    ReplyDelete