
எங்கு இருக்கீங்க…எப்ப வருவீங்க…
உங்கள பார்க்கணும்…பேசணும்….
தோள்களில் சாயணும்…மார்பில் முகம் புதைக்கணும்…
உன் அணைப்பில் நானிருக்க
என் கண்களில் நீ வாழணும்…
சத்தியா சொல்றேன்….
உன் மனதை காயப்படுத்தமாட்டேன்….
கலங்க வைக்கமாட்டேன்…
என் பகலும், என் இரவும் நீதான்….
என் விடியலாக உன் விழி,
என் நிஜமாக உன் மீசை…
எப்போதும் நீ என் பக்கத்தில்…
உன் வாழ்க்கை பயணத்தில் துணையாக நான்…
உன் வெற்றியின் பின்னால் நான் சின்ன நிழலாக…
எப்போது வருயாய்….
உன் பெயர் தெரியாது….
ஊர், வயது, உருவம்…எதுவும் தெரியாது….
எதுவும் தெரியாது….ஆனாலும் நேசிக்கிறேன்….
ஏன் என்று தெரியாது….
என் வாழ்வே நீதான்…
ஜென்மம் பல காத்துகிடப்பேன்…- உனக்காக…
உன் சுவாசமிருக்கும் முகவரி தெரிந்தால் போதும்…
என் உயிர் மறு ஜீவன் பெறும்….
உன் வெப்பம் – என் மணிமாளிகை,
உன் சுவாசம் – என் தேடல்,
உன் விழி – என் ஒளி,
நீ – என் இன்பம்,
- என் நவம்பர் மாத மழை
- சில்லெனும் மழைச்சாரல்
- மார்கழி குளிர்
- சித்திரை வெயில்
என் உயிர் நீ,
நீயின்றி நான் ஏது,
என்னிடம் வந்து விடு,
உன் இதயத்தை இதமாய் பார்த்துக்கொள்வேன்,
உன் குழந்தைக்கு நல்ல அம்மா,
உன் அம்மாவுக்கு என்றும் சுகமான மகள்,
தந்தைக்கு பொறுப்பான மருமகள்,
உன் குலம் காக்கும் பெண்மகள்…
உனை என்றும் மறக்கமாட்டேன்…
காணும் வரை இறக்கமாட்டேன்…
உயிரே வந்துவிடு…
இளமை போனப்பின்னும் உன் கை பிடித்து நடந்து
முதுமை காதலை உன்னோடு நான் நுகர வேண்டும்…
என் காதல் உண்மையானது….அதுவும் உனக்கானது…
உனை மட்டுமே நினைத்து வாழும் ஜீவன் இது!
No comments:
Post a Comment