>முத்து முத்து மகளே,
>முகம் காணாத மகளே
>மாதங்கள் பத்து மனதினில்
>சுமந்து
>கற்பனையில் பெற்ற கண்மணியே
>நான் உனக்கு கவிதையில்
>எழுதும் கடிதம்
>எழுதுகிறேன் ஒரு கடிதம்
>வானத்து மலரே வையத்து
>நிலவே
>வாழ்க்கையில் பொருளே வா
>மலடியின் மகளே மகள் எனும்
>கனவே
>மடியினிலே நீ வா
>பாறையில் மலர்ந்த தாமரையே
>இரவினில் எழுந்த சூரியனே
>எழாமலே எழும் நிலா நீயே
>முன்னூற் நாள்
>கர்ப்பத்திலே
>வாராத பெண் நீயடீ
>எந்நாளுமே நான் பொம்மைதான்
>என்றாலும் தாய்தானடி
>உலாவும் வானம்பாடியாய்
>பண்பாடி வாழ்க கண்ணே
>புறாவைப் போல சாந்தமாய்
>பண்பாடு போற்று பெண்ணே
>நாளொரு மேன்மை நீ பெறுவாய்
>நான் பெற்ற இன்பம் யார்
>பெறுவார்
>பெறாமலே பெறும் சுகம் நீயே!
>சிந்தாமணி என் கண்மணி
>சிற்றாடை நீ கட்டடி
>என் மாளிகை முற்றத்திலே
>பொன்னூஞ்சல் நீயாடடி
>உலாவும் அன்புக் கோகிலம்
>எங்கேயும் கானம் பாடு
>கனாவில் கூட சோம்பலே
>இல்லாமல் ஞானம் தேடு
>நல்லவளாக நடை போட்ய்
>வல்லவளாகிட தடை ஏது
>விழாமலே விழும் மழையே
>பொல்லாதது உன் பூமிதான்
>போராட்டம்தான் வாழ்வடி
>கொல்லாமலே கொவாரடி
>வராத துன்பம் வாழ்விலே
>வந்தாலும் நேரில் மோது
>பெறாத வெற்றி இல்லையே
>என்றே நீ வேதம் ஓது
>ஊமைக்கும் நாக்குகள்
>வேண்டுமடி
>உரிமைக்கு போரிட தேவையடி
>தொடாமலே சுடும் கனல் நீயே!
நல்லயிருக்க்கு மலர்
ReplyDeleteஇது ஒரு பாடல் அண்ணா...
ReplyDeleteகல்கி என்ற படம் :)