Thursday, March 24
Monday, May 27
மனைவி...
Tuesday, December 13
Tuesday, June 7
சினேகிதிக்கு,
என் இனிய சினேகிதிக்கு,
என்னவென்று சொல்வேன்...
என் செவியில் இசைந்த குயிலின் குரலை...
நீ உதட்டிலிருந்து சிந்திய வார்த்தைகள்...
கூட்டிலிருந்து சிந்திய தேன்...
துளிகளாய் சிதறியது என் மீது...
என்ன விந்தையடி..பெண்ணே...
குயில் கூவுவதை கேட்டிருக்கிறேன்...
முதல் முறை கேட்கிறேன்...
ஒரு குயில் பேசுவதை...
கடவுளிடம் கோபிக்கிறேன்...
எனை இங்கு பிறக்க வைத்ததற்கும்...
மலரை எனை விட தூரமாக மலர செய்ததற்கும்
ஒரு முறை தான் வீசினாய் ...தென்றலாய்...
உன் இதழ்களின் இடையிலிருந்து
ஒரு முறைதான் சுவாசித்தேன்....
அந்த தென்றலே எனது உயிர் மூச்சாகிப் போனது....
குயிலின் இசையை மட்டும் கேட்கிறேன்...
குயில் முகம் காண துடிக்கிறது மனது...
நமது இதழ்கள் சிந்திய வார்த்தைகள் சந்தித்து விட்டன...
நமது விழிகள் சந்திப்பது எப்போது ?
என் வயதைக் குறைக்க ஆசைப்படுகிறேன்...
இளமையாவதற்கு அல்ல...
உன் மாணவனாவதற்குத்தான்...
பாடம் கற்க அல்ல...
உன் குரலைத் தினமும் கேட்பதற்கு...
நான் காற்றாய் பிறந்திருக்கக் கூடாதா?
உன் சுவாசமாகி...
இதழ்களின் இடையில் வார்த்தையெனும்
இசையாய் மாறி இருப்பேனே!
மலர்விழி என்றதும்...உன் விழிகள் மட்டும்
மலராய் இருக்குமென நினைத்தேன்...
மலரின் வாசத்தை வார்த்தையாக வீசுகிறாயே !!!
உன் இனிய சினேகிதன் :)
முதுமை காதல்!
முதுமையிலும் தடி பிடிக்காமல்
அதே இறுக்கத்துடன் உங்கள்
கை பிடித்து நடக்க வேண்டும்...
நம் இளமை காலத்தை
எண்ணி எண்ணி பொக்கை வாயை
அகலமாய் விரித்து சிரிக்க வேண்டும்....
அந்த வயதிலும்
உங்கள் வெளுத்த முடியை என் விரல்களில் இடையே
மெதுவாய் பின்னி செல்லமாய் இழுக்க வேண்டும்...
நீங்கள் கோபமாய் முறைக்க
நம் விழிகள் மோதிக்கொள்ள வேண்டும்...
பேத்தியின் கன்னத்தில்
பதிந்த உங்கள் முத்தத்தின் ஈரம் காயும் முன்னே
யாரும் அறியாமல் நான் அதை முழுதாய் ருசிக்க வேண்டும்...
என் மடியின் உங்கள் தலை சாய
என் நெற்றி உங்கள் இதழ் சேர
நம் மூச்சு ஒன்றாய் கலக்க
நம் இனிய வாழ்வை அசைப்போட்டுக்கொண்டே
மரணம் மறவாமல் நமை தழுவிக்கொள்ள வேண்டும்!!!
Saturday, May 21
வந்து விடு........

எங்கு இருக்கீங்க…எப்ப வருவீங்க…
உங்கள பார்க்கணும்…பேசணும்….
தோள்களில் சாயணும்…மார்பில் முகம் புதைக்கணும்…
உன் அணைப்பில் நானிருக்க
என் கண்களில் நீ வாழணும்…
சத்தியா சொல்றேன்….
உன் மனதை காயப்படுத்தமாட்டேன்….
கலங்க வைக்கமாட்டேன்…
என் பகலும், என் இரவும் நீதான்….
என் விடியலாக உன் விழி,
என் நிஜமாக உன் மீசை…
எப்போதும் நீ என் பக்கத்தில்…
உன் வாழ்க்கை பயணத்தில் துணையாக நான்…
உன் வெற்றியின் பின்னால் நான் சின்ன நிழலாக…
எப்போது வருயாய்….
உன் பெயர் தெரியாது….
ஊர், வயது, உருவம்…எதுவும் தெரியாது….
எதுவும் தெரியாது….ஆனாலும் நேசிக்கிறேன்….
ஏன் என்று தெரியாது….
என் வாழ்வே நீதான்…
ஜென்மம் பல காத்துகிடப்பேன்…- உனக்காக…
உன் சுவாசமிருக்கும் முகவரி தெரிந்தால் போதும்…
என் உயிர் மறு ஜீவன் பெறும்….
உன் வெப்பம் – என் மணிமாளிகை,
உன் சுவாசம் – என் தேடல்,
உன் விழி – என் ஒளி,
நீ – என் இன்பம்,
- என் நவம்பர் மாத மழை
- சில்லெனும் மழைச்சாரல்
- மார்கழி குளிர்
- சித்திரை வெயில்
என் உயிர் நீ,
நீயின்றி நான் ஏது,
என்னிடம் வந்து விடு,
உன் இதயத்தை இதமாய் பார்த்துக்கொள்வேன்,
உன் குழந்தைக்கு நல்ல அம்மா,
உன் அம்மாவுக்கு என்றும் சுகமான மகள்,
தந்தைக்கு பொறுப்பான மருமகள்,
உன் குலம் காக்கும் பெண்மகள்…
உனை என்றும் மறக்கமாட்டேன்…
காணும் வரை இறக்கமாட்டேன்…
உயிரே வந்துவிடு…
இளமை போனப்பின்னும் உன் கை பிடித்து நடந்து
முதுமை காதலை உன்னோடு நான் நுகர வேண்டும்…
என் காதல் உண்மையானது….அதுவும் உனக்கானது…
உனை மட்டுமே நினைத்து வாழும் ஜீவன் இது!
Thursday, May 19
கல்யாணம்
தோழி : ஏய் ! நீ எப்போதான் கல்யாணம் பண்ண போற…எப்படி பட்டவரை எதிர்பார்க்குற??
நான் : கல்யாணமா?! நடக்கும் போது நடக்கத்தும்…எப்போ என்ன அதை பத்தின பேச்சு…வேலை இருந்தா பாருமா….
தோழி : தோடா…போதும்…அடங்கு…எனக்கு தெரியாதா உன்ன பத்தி…ஆயிரம் ஆசை உன் மொழியில தெரியுது…உன் மனசு எனக்கு தெரியும்…உண்மைய சொல்லுமா என் ராசாத்தி…
நான் : ஹாஹாஹா…சரிதான்…உனக்கு ரொம்பவே திறமை…but கொஞ்சம் அமைதியா கேளு…அவசர படாதமா…
தோழி : ம்ம்ம்….சொல்லு…ஓவர் சீன் போடாதே…ரொம்பெ படிச்ச, நல்ல வேலை செய்யும் ஒருத்தர்….அப்படிதானே…அதோட உன்ன நல்ல பார்த்துக்கணும்…பாடணும்…ம்ம்ம்…etc…ஓகேவா?!
நான் : no no no….இல்ல…நான் அங்கவீனரை துணையா ஏற்கலாம்னு நினைக்கிறேன் !
தோழி : ஏய்! என்னடி ஆச்சு…ஏன் இப்படி? U mean cacat….?
நான் : yea...தெரியல…திடீர்னு இப்படி ஒரு எண்ணம்…அதோட எனக்கு மட்டும் விருப்பம் இருந்து பயனில்ல…அவருக்கும் உடன் பாடு இருக்கனும்…தன் குறையினால் தான் தனக்கு இப்படி ஒரு பெண் துணையா இருக்கானு ஒரு நினைப்பு அவருக்கு ஒரு போதும் வர கூடாது….
தோழி : ஏய்! உனக்கு என்ன பைத்தியமா…உனக்கு என்ன குறைச்சல்…ஏன் இப்படி நினைக்கிற? நீ ரொம்ப நல்லவடி…
நான் : இதுல என்ன இருக்கு! Don’t worry dear…it’s reality…சுமார இருக்கும் பெண்களுக்கே பல குறை கண்டு பிடிக்கிறாங்க…தன் மனவியை விட அழகாய் ஒரு பெண்ணைப் பார்த்தால் கூட ஆண் மனம் அலைகலையுமாம்! அப்படி இருக்க நான் எல்லாம் எம்மாத்திரம்…சொல்…
தோழி : ….
நான் : என் சுக துக்கங்களில் பகிர்ந்து கொண்டு என் உறவுகளை ஏற்று எதிர்காலத்தை திட்டமிட்டு என்றும் உண்மையாய் என்னிடம் அன்பாக உறவாடும் ஒரு ஜீவன் போதும்…மற்றபடி பெரிய ஆசையெல்லம் இல்லை…இது கூட நப்பாசையோனு தோனுதுமா!
தோழி : இது சராசரி பெண்ணின் ஆசை தான்…ஆனா முதல்ல நீ சொன்ன விஷயம்…
நான் : ம்ம்ம்…ஒரு அங்கவீனர்…
தோழி : செவிடர் வேனா…உன் சின்ன செல்ல குரலைக் கேட்கும் பாக்கியம் அவருக்கு இல்லாமல் போகும்…அதுவே அவரை வருந்த வைக்கும்..வேணாம்மா….
நான் : ஊமையானவர்…!?
தோழி : வேணா…வேணா…உன் மொழி கேட்டு உன்னோடு வாய் சண்டை போடும் அழகை நான் பார்க்கணும்…அதோட நீயே வாயாடி, உனக்கு ஈடு தர…….
நான் : என் மனசில…ஒரு குருடர்…! என் அக அழகை மட்டும் பார்க்கும் ஒரு இதயம்…actually எப்படி இருந்தாலும் ஓகே…நிஜமா எனை விரும்பனும்…
தோழி : உன் மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்…
நான் : மு.வ. சொன்ன ஒன்னு ஞாபகம் வருது…ஒரு மாளிகை கட்டி வாழ முயற்சி செய்…முடியவில்லையெனில், சாதாரண உனக்கு ஏற்ற வீட்டில் வாழ்….இல்லையெனில், குடிசையில் வாழ்ந்து பார்…இல்லை மரத்தடியில் வாழவும் வருந்தாதே….பெண்ணின் திருமண வாழ்க்கை இதற்கு பொருந்தி வரும் அழகே அழகு….
தோழி : இன்னொன்று மறந்து போனாயா? சிலர் காதலுக்காக வாழ்கிறார்கள்; சிலர் காதலைத் தேடி பெற்று வாழ்கிறார்கள்; இன்னும் சிலரோ ஆராய்ந்து காதலைப் பெறுகிறார்கள்…நீயும் அதை விரைவில் நுகர வேண்டும்……………
Saturday, May 7
தாய்மை
உங்கள் அன்பில் நனைந்தேன், திளைத்தேன்... - இன்று
உணர்கிறேன்...- நான் இல்லையேல்,
அம்மா...
உங்களுக்கு மலடி என்ற அவலப்பட்டம்,
உங்களுக்குள் தாய்மையைத் உணரச்செய்த கரு - நான்!
உங்கள் தோளில் சாய்ந்து, மடியில் விளையாடி,
உதிரத்தில் வளர்ந்து, கனவை நினைவாக்கி,
உங்கள் அன்பு மகளாய் முன் நிற்கிறேன்,
பொறுமையும் புன்னகையும் பெண்ணில் அணிகலன்,
நீங்கள் எனக்கு தந்த பொன் நகையது...
Thursday, October 7
வாழ விடு...
என் நிழலான நிஜமே...
என் காதலான அன்பே.....
உன்னோடு வாழப்போவது யாராகினும்
உன் காதலை சுமப்பது நான் மட்டுமே!
பிறப்பும் இறப்பும் தனிமையில் - ஆனால்
என் வாழ்வு உன் அருகாமையில்...........
என்னை கொஞ்சம் வாழ விடு <:)>
Tuesday, May 4
Thursday, April 8
என் சின்னஞ்சிறு கண்மணிக்கு
என் சின்னஞ்சிறு கண்மணிக்கு
என் சின்னஞ்சிறு
கண்மணிக்கு
அம்மா எழுதுவது ..
இன்றோடு நீ உதித்து
பதினோரு வாரம்..
என் வயிற்றில் நீ
இனியதொரு பாரம் ..!
தாயும் பிள்ளையும்
என்றாலும்
வாயும் வயிறும்
வேறாம்..!
சொல்பவர்கள்
சொல்லட்டும்
அவர்களுக் கென்ன
தெரியும் ..
உன் பசிக்கு
என்றே உண்டு
உன் உறக்கம்
மட்டும் உறங்கி
உனக்காகவே வாழும்
நம் ஓருடல் ஈருயிர் வாழ்வு ..!
முதன் முதலில்
உன்னை
மின் ஓவியமாய்
பார்த்தேன் நேற்று ..
பார்த்ததும் நெஞ்சுக்குள்
ஆசையின் ஊற்று ..
என் வயிற்றுக்
கத கதப்பில்
கருவறைக்குள்
சுகமாக நீந்திக்
கொண்டிருந்தாய் நீ ..
வார்த்தைகள் அற்ற
பரவசத்தினில் நான்..!
இரண்டே
அங்குலம் தான்
இருப்பாய் என்றார்கள் ..
ஆனால் அதற்குள்ளே
எத்தனை ஆக்ரமிப்பு
எனக்குள்ளே நீ..!!
கனவுகளில் கண்ட
உன் முகத்தை
கணிப்பொறி காட்டிய
கணம் அழியாத
புகை படமாய்
கைகளில் ஒன்றாக ..
என் நினைவுகளில்
ஆயிரங்களாக ..!
அவ்வப் பொழுது
தலை சுற்றல் ..
எப்பொழுதும் வருவது
வாந்தி மயக்கம் ..
உடல் களைத்திட்டாலும்
உள்ளம் மகிழ்கிறதே..
என்னில் நீ
இருக்கிறாயோ
அல்லது உன்னில்
நானிருக்கிறேனோ
என்று என்னை நான்
கேட்கின்றபோது
நம்மில் நாமிருக்கிறோம்
என்று செல்லமாய்
கூறி வயிற்றுக்குள்
எட்டி உதைக்கிறாய் நீ..
உன்னிடம்
உதை படுவதும்
சுகமாய் தான்
இருக்கிறது எனக்கு..!
நூலகம் நுழைந்து நான்
தேடுவதெல்லாம் ,
“காட்டுக்குள்ளே திருவிழா”
“வன தேவதையும்..
விறகு வெட்டியும் ” .. தான்
“பாட்டி வடை சுட்ட
படக் கதை”- யும்
தவறுவதில்லை..
கூடவே பிடிபடாத
கணக்குப் பாடத்தை
சிரத்தையுடன்
செய்கின்றேன்..
அம்மாவின் ஐக்யூ தான்
குட்டி பாப்பாவிற்கும்
வந்து விடுமென்று
சொன்னதினால்
வந்த பயம்..!!
காத்திருப்பு
என்றுமே சுகமாய்
இருந்ததில்லை ..
ஆனால் இப்பொழுது
இருக்கிறதே
வெகு பரவசமாய்..
இன்னமும் ஏழு
மாதங்கள்
இருக்கிறதாம்..
முழு நிலவாய்
உன்னை மண்ணில்
நான் காண்பதற்கு ..!
என் கருவறையின்
கத கதப்பில்
இதயத்தின்
தாலாட்டில்
சுகமாகத் திரியும்
உன்னை நிரந்தரமாய்
சிறையில் தள்ள
காத்திருகின்றேன் நான் ..!
பயந்து விடாதே ..
இது அன்பெனும்
கம்பிகள் கொண்ட
நம் குடும்பமெனும்
பாச(அ)றை ..!
இதற்குள் என்றைக்கும்
பிணைக் கைதிகளாய்
நானும் உன் அப்பாவும் ..
விரைவில் நீயும் …!
இருப்பாய் தானே..?
நீ இருப்பாய்
என்கின்ற
நம்பிக்கை தான்
எங்கள் வாழ்வாதாரம்..!!
நீ பெண்ணாக
இருப்பாய் என்று
உன் அப்பா ‘சகி’
என்று பெயரிட்டார்..
ஒவ்வொரு நாளும்
நீ அழகாய் வளர்ந்திட
என்னுடன்
இணைபிரியாத ஓர்
ஒப்பந்தம் இட்டார்..
ஆனால் நீயோ
ஆண் குழந்தையாம்..
மருத்துவர்
சொல்லிவிட்டார்..
இப்பொழுது
பிரணவ் என்று
மாற்றி உன்னை
அழைக்கிறோம் ..
உயிரில் இருந்து
உயிராக வந்தவன்
என்பதால்
மட்டும் இல்லை..
பெண்மையை
உயிராய் மதிப்பாய்
என்பதனாலும் தான்..
உன்னை பெண்ணாக
பாவித்து சில நாட்கள்
வாழ்ந்ததினால்
பெண்ணின் உணர்வுகளும்
உனக்கு புரிந்திடவே
செய்யும் என்று நம்புகிறேன் ..
அன்னையின் கருவுக்குள்ளே
வேதங்களே கற்றிடுமாம்
சிறு குழந்தை ..
நீ பெண்ணியலா
கல்லாமல் இருந்திடுவாய்..
என் விருப்பு நான் மறந்து
உன் வளர்வில்
மனம் நிறைகின்றேன்..
எனக்கென்ற கனவுகள்
இருந்தது ஒரு காலம்..
நிஜமென நீ இருக்கையில்
கனவுகளும் நீயாய் போனாய் ..!
ஒவ்வொரு மாதமும்
வளர்வது
நீ மட்டுமல்ல ..
உன்னுடன் நானும் ..
உன் அப்பாவும் தான்..!
கூடவே சில சிரமங்களும்..
நிஜங்களையும்
நீ அறிந்திடவே
நான் இதனை கூறுகின்றேன்..
உன் வாழ்க்கை
தேன் கிண்ணமாய்
தித்திப்புடன் மட்டுமே
என்றென்றும் இருக்கும்
ஓயாமல் உழைக்கும்
தேனீக்களாய் நானும்
அப்பாவும் இருக்கும்வரை..!
பிரதி பலனாய்
நான் கொஞ்சம்
எதிர் பார்க்கவும்
செய்கிறேன் கண்ணா ..
நீ ஆண் என்று
அறிந்ததில் இருந்து ..!
முட் கிரீடத்தை
சூட்டி விடுவேன்
என்று நினைக்காதே..
ஒவ்வொரு
பெற்றோருக்கும்
ஒரு சில கனவுகள்
இருந்தே தீரும்..
சிலர் சொல்கிறோம்..
சிலர் மறைக்கிறோம்..
தலைப் பிரசவம்..
பிழைத்தால்
எனக்கிது மறு ஜன்மம்..
இல்லாவிடின் மறு ஜனனம் ..
என் உயிர் ஊட்டி
உன் உடல் வளர்க்கிறேன் ..
என் பிரதி பலிப்பாய்
இருந்திடுவாய்
என்பதால் அல்ல..
உனக்கொரு முகவரியுடன்
தனித்துவமாய் இருப்பாய் என்று !
எப்போதும் நினைவுகொள் ..
ஆணிற்குப் பெண்
என்றைக்கும் சமமில்லை..
தாயாகும் பெண்ணிற்கு
வேறொன்றும் ஈடில்லை ..
உடன்படு..அதனால் கடன்படு ..
உயிர்பட்ட கடனை
எல்லா உயிர்களிடத்தில்
சமத்துவ அன்பு காட்டி
வட்டியுடன் தீர்…!
நியூட்டன் , எடிசன்
ஐன்ஸ்டீன் அறிவுடன்
இருந்திடாமல் போனாலும்
புத்தர், காந்தி
தெரசா பணிவுடன்
என்றென்றும் வாழ்ந்திடு ..
போலித் தனம் தவிர்…
மொழி வெறி, இன வெறி
நிற வெறி , மத வெறி
ஏதும் இல்லாத புதியதொரு
உலகம் சமைத்திடு ..
அதில் சமாதானப்
பூக்களை
நாளும் வளர்த்திடு
பின்பு எனக்கு கொள்ளியிடு…..!
உன்னிடம் இருந்து
நிறைய எதிர்பார்க்கும்
உன் சுயநலக்கார அம்மா














